குஜராத்: சூரத் மாவட்டத்தை சேர்ந்த மயூர் தராபரா என்ற இளைஞர் வேலையில் இருந்து விலக விரல்களை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயூர் தனது உறவினரின் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். அந்த வேலை அவருக்கு பிடிக்காத நிலையில், தன்னை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியற்றவராக மாற்றிக் கொள்வதற்காக 4 விரல்களை வெட்டிக் கொண்டு நாடகமாடியுள்ளார். இதையடுத்து, போலீஸ் விசாரணையில் மயூர் உண்மையை கூறியுள்ளார்.