ஜெயம் ரவியின் 34-வது (JR 34) படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று (டிச.14) இன்று நடைபெற்றது.