திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

திருவிடைமருதூா்: காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நேற்று (டிசம்பர் 11) காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.  திருவிடைமருதூர் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் மகாதேவன் (72). இவர் நேற்று (டிசம்பர் 11) உறவினர் வீட்டுத் துக்கநிகழ்வில் கலந்துகொண்ட பிறகு கல்யாணபுரத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தார்.  அப்போது, நீரில் மூழ்கிய மகாதேவனை அக்கம்பக்கத்தினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் மகாதேவன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా