செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

59பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மேலவீதி பகுதியில் கடந்த 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து வந்து நடைபயிற்சி சென்ற மணிமேகலை என்ற பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்றனர். மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி காவல் நிலைய பகுதியில் ஒரத்தநாடு பின்னையூரை சேர்ந்த இளந்தமிழன் என்பவர் எலிசா நகர், ஆலியா ஹோட்டல் அருகில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பெயரில் சிசிடிவி கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜி மேற்பார்வையில் திருவிடைமருதூர் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் தன்ராஜ் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அகமது யாசின் (20), ஏசு கவிபாலன் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஏழு சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அகமது யாசின், ஏசு கவிபாலன் இருவரும் தஞ்சாவூர் எலிசா நகரில் இருசக்கர வாகனத்தை திருடி அதை எடுத்துக்கொண்டு திருவிடைமருதூர் பகுதிகளில் நோட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி