மணலூரில் மதுரை ஆதீனம் பேட்டி

61பார்த்தது
மதுரை ஆதீனம் பேட்டியில் கூறியதாவது,
பாரத நாடு ஆன்மீக பூமி. ஆன்மீகம் தான் உலகை ஒருங்கிணைக்கிறது. தமிழகத்தில் தற்போது பக்தி அதிகமாக உள்ளது. சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் என பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்கிறார்கள்.
சபரிமலை யாத்திரை சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலூர் போன்ற கிராமங்களில் ஐயப்பன் கோயில் அமைத்து வழிபாடு நடத்துவது பாராட்டுக்குரியது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் நவக்கிரக கோயில்கள் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் தரிசனம் செய்ய தமிழகம் வருகின்றனர்.
இப்படியாக மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக கோயில்கள் உள்ளது.. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களிடம் ஆன்மீகம் அதிகரித்துள்ளது. அது இன்னும் சிறப்பு பெற வேண்டும். பெற்றோர்கள் கோயிலுக்கு செல்லும் போது, பிள்ளைகளை அழைத்து சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில், இந்தியாவை கண்டு உலக நாடுகள் அனைத்தும் மிரளுகிறது. வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்கள் வருந்தப்படும் அளவுக்கு உள்ளது. நமது நாட்டில் எல்லா மதத்தையும் ஒற்றுமையாக நினைக்கிறோம். இந்து சமயம் தான் எல்லா மதத்தையும் ஒன்றுப்படுத்துகிறது. சபரிமலை போன்ற கோயில்களில் வழிபாட்டில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் மிகவும் அவசியமான ஒன்று.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி