சென்னை உள்ளிட்ட 3 மத்திய சிறைச்சாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மத்திய சிறைகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக் கொண்டதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் தகவல் தகவலை அடுத்து திருச்சி மத்திய சிறையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.