பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் டிச.31க்குள் 90% பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார். ஜன.10க்குள் எஞ்சிய நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறிய அவர், திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.