அணைக்கரையில் 14. 20 மி. மீ. மழை பதிவு

73பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் அதிகபட்சமாக 14.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தஞ்சை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 1) காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் நிலவியது. ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் பலத்த காற்று வீசியது. பின்பு நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது.

அதன்படி, நேற்று முன்தினம் அதிகபட்சமாக அணைக்கரையில் 14.20 மில்லிமீட்டர் மழை பதிவானது. அதேபோல், வெட்டிக்காடு 7.20, ஒரத்தநாடு 6, அதிராம்பட்டினம் 0.70, நெய்வாசல் தென்பாதி 5.20, அய்யம்பேட்டை 11, குருங்குளம் 3, தஞ்சாவூர் 4.20, பூதலூர் 12.60, திருவையாறு 2, பாபநாசம் 16, கல்லணை 0.60, கும்பகோணம் 5, வல்லம் 5 என மாவட்டம் முழுவதும் 112.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் சராசரியாக 5.37 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி