தஞ்சாவூர்: நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தெற்கு வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மருதவாணன் என்பவரது மனைவி மணிமேகலை (62). இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அதேபோல் இன்று அதிகாலை திருவிடைமருதூர் தெற்கு வீதியில் நடைபயிற்சியின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மணிமேகலையின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி செயினை மின்னல் வேகத்தில் பறித்து சென்றனர். செயினை பறிக்கும் போது கீழே விழுந்து காயமடைந்த மணிமேகலையை அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவிடைமருதூர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும், முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you