தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் அருகே வேன் மீது ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலியான நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சேத்தியாதோப்பில் இருந்து திருவாரூருக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் சுற்றுலா வேனில் இன்று காலை வந்துள்ளனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை வழியாக திருப்பனந்தாள் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் திரும்பும் போது, கும்பகோணத்திலிருந்து ஜல்லிகற்கள் ஏற்றிச் சென்ற லாரி, வேன் மீது மோதியது.
மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 வயது சிறுவன் பலியானார் வேனில் பயணித்த அனைவருக்கும் காயங்களுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் தகவல் அறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்