பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

71பார்த்தது
பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது




தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உள்ள ஆடுதுறையில் திருவிடைமருதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து 110 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த கோவிந்தபுரம் புது தெருவை சேர்ந்த பழனி என்பவரது மகன் பாபு (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது பற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி