மயிலாடுதுறை அருகே மணக்குடி பகுதியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர் மன்ற துணைத் தலைவர் குமார் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.