ஸ்காட்லாந்தில் கால்நடை மருத்துவராக இருந்த ஜான் பாய்ட் டன்லப், கரடு முரடான சாலைகளில் குதிரைகள் சிரமப்பட்டு வண்டி இழுத்து வருவதைப் பார்த்தார். குதிரைகளின் சிரமத்தை குறைக்க சோதனையில் ஈடுபட்டார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் பயன்படும் குழாயை வெட்டி டியூப் தயாரித்து, காற்று நிரப்பி அதை மிதிவண்டியின் பின்புற சக்கரத்தோடு இணைத்தார். இதனால் மிதிவண்டிகள் எளிதாக சாலையில் உருண்டோடியது. இதை மேம்படுத்தி 1888-ல் காப்புரிமை பெற்றார்.