சித்த மருத்துவத்தில் கடுக்காய் முக்கிய பொருளாக விளங்குகிறது. மயிலாடுதுறை அருகே திருக்குறுகை வீரட்டம் திருத்தலத்தின் தல மரமாகவும் விளங்குகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது மூளை செயல் திறன் அதிகரிப்பு, எடை குறைப்பு, செரிமானத்தை இலகுவாக்க, முடி உதிர்வை தடுக்க, வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண் குணமாக, மலச்சிக்கலை போக்க, ரத்தத்தை சுத்திகரிக்க, மூல நோயை தடுக்க, தொண்டையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.