பலாப்பழத்தை நெய்யில் வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதனுடன் பலாப்பழ விழுதை கலக்கவும். அரிசி மாவில் சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி இதனுடன் நெய், பலாப்பழக் கலவை, தேங்காய் துருவல், ஏலக்காய், சுக்குப் பொடி போட்டு புட்டு மாவு பதத்தில் கிளறவும். பின்னர் இதை இட்லி தட்டில் பரப்பி, வேக வைத்து எடுத்தால் சுவையான பலாப்பழ புட்டு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி உண்பர்.