உ.பி., மாநிலம் மதுராவில் பாஜக பிரமுகர், பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக உள்ளூர் போலீசார் தனது புகாரை புறக்கணித்ததாக டெல்லி போலீசில் அப்பெண் புகாரளித்துள்ளார். அவர் தன்னை வேலை வாங்கித் தருவதாகக்கூறி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.