சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக தொடா்ந்து புகாா் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மது க் குடிப்போா் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவாயில் வளாக கதவை பூட்டி முற்றுகையிட்டனா்.
சம்பந்தப்பட் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.
சீா்காழி போலீஸாா் கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.