நன்னிலம் - Nannilam

கொட்டையூரில் ஆடு திருடர்கள் கைது - வாகனம் பறிமுதல்

கொட்டையூரில் ஆடு திருடர்கள் கைது - வாகனம் பறிமுதல்

வலங்கைமான் அருகே கொட்டையூரில் ஆடுகள் தொடர்ந்து திருட்டுப் போய் வந்துள்ளது. ஆடுகள் காணாமல் போவதை பொதுமக்கள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் காரில் வந்து ஆடுகளை ஏற்றுவதை பார்த்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வலங்கைமான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நன்னிலம் டிஎஸ்பி சரவணகுமார் உத்தரவின் பெயரில் வலங்கைமான் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையிலான, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த வலங்கைமான் கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பசுபதி, தமிழரசன், பாலமுருகன், பரவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆடுகளை திருடும்போது, ஆடுகள் சத்தம் போடாமல் இருக்க அதன் வாயில் பிளாஸ்டிக் செல்லோ டேப்பை சுற்றி ஏசி உள்ள காரில் கடத்தியுள்ளனர். ஏசி வாகனம் என்பதால் ஆடுகள் சுவாசிப்பதற்கு ஏதுவாக இருந்துள்ளது. இதையடுத்து ஆடு திருட பயன்படுத்திய கார் மற்றும் 2 ஆடுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வலங்கைமான் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


திருவாரூர்