நன்னிலம் - Nannilam

குடவாசல் அருகே பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞர் தலைமறைவு

மணக்கால் அய்யம்பேட்டை மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜான் பிரான்சிஸ். இவர் கம்ப்யூட்டராக பணி செய்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய மகள் உள்ளார். ஜான் பிரான்சிஸ் மகள் மணக்கால் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.  ஜான் பிரான்சிஸ் உடன் மணக்கால் அய்யம்பேட்டை, மில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் 25 வயதுடைய அறிவழகன் என்பவரும் கம்ப்யூட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அறிவழகன் மற்றும் ஜான் பிரான்சிஸ் சேர்ந்து பணிக்கு சென்று வருவதால், ஜான் பிரான்சிஸ் வீட்டிற்கு அறிவழகன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பொழுது அறிவழகனுக்கும் ஜான் பிரான்சிஸ் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவழகன் மற்றும் ஜான் பிரான்சிஸ் மகள் ஆகிய இருவரும் நெருங்கி பழகியதால் 15 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.  தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நன்னிலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அறிவழகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த அறிவழகன் தலைமறைவாகியுள்ளார். தற்போழுது காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள அறிவழகனை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


திருவாரூர்