குளத்திற்குள் தேர் பவனி வினோத வழிபாடு

73பார்த்தது
"நாடு நலம் பெற வேண்டி கழுத்தளவு தண்ணீரில் உலா வந்த அய்யனார். 25 வருடங்கள் கழித்து மீண்டும் திருவிழா. "

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நல்லமாங்குடி பகுதியில் கைலாசநாதர் சிவகாமசுந்தரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியாக அய்யனார் சுவாமி அமைந்துள்ளது.
இந்த கோவிலில் 25 வருடங்கள் கழித்து இன்று அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டு தேரை பக்தர்கள் தோளில் சுமந்து
நல்லமாங்குடி, சிகார்பாளையம், பாவேந்தர் நகர், குமாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்தது. அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை செய்த வழிபட்டனர்.
பிறகு அய்யனார் சுவாமியை கழுத்தளவு தண்ணீர் உள்ள குளத்தில் இறங்கி தூக்கிச் சென்று மற கரையை அடைந்தனர்.
மேலும் விவசாயம் செழிக்க வேண்டி வயல் வெளிகளும் சாமியை தூக்கி சென்றனர்.
இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சுவாமி புறப்பாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி