வனதுர்க்கை கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

81பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே துர்கா நகர் பகுதியில் உள்ள விளாங்காட்டில் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் பெறலாம் என்றும், கடன் பிரச்சனை, திருமண தோஷம் ஆகியவை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புணரமைக்கும் பணி நடைபெற்று திருப்பணிகள் முடிவுற்று நேற்று(ஆக.30) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 27.08.2024 அன்று விக்னேஸ்வர பூஜை நடைபெற்று. தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று மூன்றாம் கால யாக பூஜை முடிவடைந்த நிலையில் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கணங்கள் புறப்பட்டு மேல தாளங்களுடன் ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.

தொடர்ந்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி