
நன்னிலம் அருகே இரு சக்கர வாகன விபத்து
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காக்கா கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவர் திருவாரூருக்கு செல்வதற்காக இன்று (ஏப்ரல் 16) காலை பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். காக்காகோட்டூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அரசு பேருந்து பின்னால் வந்து மோதியதில் சிவராமன் பரிதாபமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.