வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வரவேற்பு

50பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பெரிய தேர் பவனி வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் வேளாங்கண்ணியில் நடைபெறும் ஆண்டு திருவிழாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாதை யாத்திரையாக ஆரோக்கிய மாதா உருவ சிலை மற்றும் கொடியை தாங்கி வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டம் வழியாக திண்டுக்கல், கோவை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் தங்குவதற்கு இடம் மற்றும் உணவு மருத்துவ முகாம் ஆகிய வசதிகளை செய்து தருகின்றனர். மாவட்ட காவல்துறை பாதயாத்திரையாக செல்கின்ற பக்தர்களுக்கு இரவில் மிளிரும் பிரதிபலிப்பு வில்லைகளை ஒட்டி அனுப்புகின்றனர்.
வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி கொடி இறக்கும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடையும் நிலையில் தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமே உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி