நன்னிலம் - Nannilam

நன்னிலம்: மாநாடு வெற்றி பெற வழிபாடு செய்த தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் வருகின்ற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் அந்தக் கட்சிக்கான முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் பெரு வாரியாக பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லுமாங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று(அக்.6) நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் கட்சி நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

வீடியோஸ்


திருவாரூர்
Oct 07, 2024, 13:10 IST/திருவாரூர்
திருவாரூர்

திருவாரூரில் இஸ்ரேல் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Oct 07, 2024, 13:10 IST
தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இணைந்து இஸ்ரேல் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இணைந்து பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பெருந்திரள ஆர்ப்பாட்டமானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ஐ. வி. நாகராஜன் தலைமையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க மாரிமுத்து முன்னிலையில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் பாலஸ்தீன மக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலை கண்டித்து உடனடியாக போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இந்திய அரசு தலையிட்டு போரை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.