பொருளாதார வெற்றி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக பல நாடுகள் தங்களது ஊழியர்களை வாரத்திற்கு 50 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வைக்கின்றன. அந்த வகையில், தைவான் நாட்டில் வாரத்திற்கு சராசரியாக 51.5 மணிநேரம் வேலை வாங்குகின்றனர். சிங்கப்பூர் வாரத்திற்கு 51.9 மணிநேரம், ஹாங்காங் வாரத்திற்கு 51.6 மணிநேரம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 52.6 மணிநேரம், மலேசியா 52.2 மணிநேரம் வேலை வாங்குகின்றனர். இந்த வரிசையில் இந்தியா இடம் பெறவில்லை.