நன்னிலம் - Nannilam

நீடாமங்கலம் அருகே நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் சுற்றுலா வந்த பயணி ஆற்றில் குளித்த போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம்நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தஞ்சை திருவாரூர் நாகை பகுதிகளில் சுற்றுலா வந்து வேளாங்கண்ணி சென்று விட்டு மீண்டும் நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு எனும் இடத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷ்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா வந்த இடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


திருவாரூர்