குறுவை நெற்பயிரில் கருப்பு வண்டு தாக்குதல் விவசாயிகள் வேதனை

80பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குடவாசல் அருகே புளிச்சக்காடி, நெய்குப்பை, செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நெற்பயிர்களில் கருப்பு வண்டு தாக்குதல் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால் கருப்பு வண்டு தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர்களுக்கு சொந்தமான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் கருப்பு வண்டு தாக்குதல் உள்ளான நெற்பயிர்கள் உள்ள கிராமங்களில் சென்று ஆய்வு செய்தார்கள்
அதன்படி புளிச்சக்காடி நெய் குப்பை கிராமங்களில் 260 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு 120 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணி நிறைவடைந்து மீதம் 135 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதாகவும் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்களில் மட்டும்தான் இந்த கருப்பு வண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்குரிய உரிய ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியதாக கூறினர். மேலும் விவசாயிகள் கருப்பு வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தவும் அவற்றை அழிக்கவும் பூச்சி மருந்துகளை ட்ரோன்கள் மூலமாக தெளித்து வருகிறார்கள்.

டேக்ஸ் :