விநாயகர் ஊர்வலத்தில் வெடி வெடித்ததால் புகைமூட்டம்

55பார்த்தது
குடவாசல் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. குடவாசல் கோனேஸ்வரர் ஆலயம் திருக்குளம் தென்கரையில் இருந்து நேற்று மாலை 6-மணி அளவில் புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் எழுந்த தீப்பொறி திருக்குளத்தில் விழுந்ததில் குளத்தில் காய்ந்த நிலையில் இருந்த புல் மற்றும் செடி கொடிகள், குப்பை கழிவுகள் பற்றி எரிந்தது.

தீ விபத்து காரணமாக கடைவீதி பகுதியில் புகை புகை சூழ்ந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் திடீர் புகையினால் சுவாச கோளாறு ஏற்பட்டு அவதி அடைந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து குடவாசல் தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போது குடவாசல் உள்ள தீயணைப்பு வண்டி கொரடாச்சேரி அருகே உள்ள பத்தூர் மேல கரையில் மூங்கில் உரசி தீ பற்றிய இடத்திற்கு சென்றிருப்பதால் தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு வண்டி நிகழ்வு இடத்திற்கு வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபடாததால் வெகு நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி