நன்னிலம் - Nannilam

திருவாரூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மன்னார்குடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்ப்பு.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஐயர்சமாதுப் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது மனைவி மகள் பேரப்பிள்ளைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வீட்டின் சுவர் ஊறி இருந்த நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் குழந்தைகள் உள்ளிட்ட ராஜேந்திரன் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். மழை நீர் பட்டு ஊறி இருந்ததால் வலுவிழந்த சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சுவர் வீட்டின் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் பார்வையிட்டு உதவ வேண்டுமென வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோஸ்

திருவாரூர்
Dec 24, 2024, 12:12 IST/நன்னிலம்
நன்னிலம்

திருவாரூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

Dec 24, 2024, 12:12 IST