கோவில்பட்டி - Kovilpatti

ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அரசு கல்லூரி முதலிடம்

ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அரசு கல்லூரி முதலிடம்

கோவில்பட்டி கலை-அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அரசுக் கல்லூரி முதலிடம் பிடித்தது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இப்போட்டி கடந்த வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் 1-க்கு 0 என்ற கோல்கணக்கில் எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியை கோவில்பட்டி அரசு கலை-அறிவியல் கல்லூரி அணி வென்று முதலிடம் பிடித்தது. கோவில்பட்டி கலை-அறிவியல் கல்லூரி அணி 3ஆம் இடத்தையும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அணி 4 ஆம் இடத்தையும் பிடித்தன. பரிசளிப்பு விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் இயக்குநர் ஆறுமுகம், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜாசிங் ரோக்லகண்ட், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கலை- அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன் வழிகாட்டுதலில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராம்குமார் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా