திருவள்ளூர் திருத்தணியில் தாலி கட்டும் நேரத்தில் காதலன் திடீரென மாயமாகிவிட்டதாக மணப்பெண் புகார் அளித்துள்ளார். ஸ்ரீதர் என்ற இளைஞர் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்பு நடந்துள்ளது. திடீரென ஸ்ரீதர் திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறி தலைமறைவானதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.