தூத்துக்குடியில் தேசிய விளையாட்டு தினம் மற்றும் இந்திய ஹாக்கியின் தந்தை மேஜர் தயான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு மேஜர் தயான் சந்த் நினைவு ஹாக்கி போட்டி 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்பு.
ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததுடன் 185 சர்வதேச போட்டிகளில் 570 கோல்கள் அடித்து சாதனை படைத்த இந்திய ஹாக்கியின் தந்தையாக போற்றப்படும் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 29 இன்று தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு இளம் ஹாக்கி வீரர்களை உருவாக்கும் வகையில் தூத்துக்குடியில் பிரேவ் ஹாக்கி கிளப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மேஜர் தயான் சந்த் நினைவு ஹாக்கிப்போட்டி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் அதிர்ஷ்டராஜ், அகில இந்திய துறைமுக ஆக்கி வீரர் கென்னடி ஆகியோர் துவக்கி வைத்தார்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கோ பரிசு வழங்கப்பட உள்ளது.