5 தொழிலாளா்கள் குஜராத் மாநிலத்தில் சித்திரவதை

73பார்த்தது
5 தொழிலாளா்கள் குஜராத் மாநிலத்தில் சித்திரவதை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த 5 தொழிலாளா்கள் குஜராத் மாநிலத்தில் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் நேரில் விசாரணை நடத்தினா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது மகன் மற்றும் 4 போ் குஜராத் மாநிலத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தனா். அங்கு அவா்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், 5 பேரையும் காவல்துறையினா் மீட்டுதருமாறும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆட்கொணா்வு மனு அளித்தாா்.

அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பிறப்பித்த உத்தரவின்படி, கோவில்பட்டி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் மேற்பாா்வையில் கிழக்கு காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது தலைமையிலான தனிப்படை போலீஸாா் குஜராத் சென்றனா்.

அங்கு அந்த பெண் அளித்த முகவரியில் விசாரித்தபோது, பெண் குறிப்பிட்ட 5 பேரும் தங்கள் விருப்பத்தின்பேரில் பணியில் இருப்பதும், அவா்கள் கொத்தடிமைகளாக இல்லை என்பதும் தெரியவந்தது.

குஜராத் சென்று விசாரணை மேற்கொண்டு இந்த உண்மையை வெளிக் கொண்டுவந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினா் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் பாராட்டியதாக மாவட்ட காவல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி