மீனவர்கள் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல்!

69பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மகாராஜா மற்றும் தேன் தெனிலா ஆகிய இருவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம், வேம்பார் , வைப்பார் , தாளமுத்து நகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்களது படகு தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து சுமார் 60 கடல் மைல்கள் தொலைவில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு நேரில் சென்ற பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க தொடர்ந்து மத்திய அரசை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் விரைவில் 22 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் மேலும் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கனிமொழி கருணாநிதி எம்பியிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்

தொடர்புடைய செய்தி