விமான பயிற்சி நிறுவனம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

62பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் விமான பயிற்சி நிறுவனம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
என

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக அரசு 432 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மினி டைட்டில் பார்க் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்றார்.

டிட்கோ மூலம் கோவில்பட்டி பகுதியில் விமான பயிற்சி நிறுவனம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்ற அவர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்பு வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டா வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த்ர் மகளிர் உதவித்தொகை விடுபட்டவர்களுக்கு வழங்க பணியை சிறப்பு திட்ட செயலாக்கு துறை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் நாலாவது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு வட்டாட்சியர் பிரபாகர் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ஷ்ட மணி , கற்பக கனி தெய்வேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி