திருமாவளவன் எம்பி பிறந்தநாள் கொண்டாட்டம்!

75பார்த்தது
எழுச்சித் தமிழரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொருள் திருமாவளவனின் 62 ஆவது பிறந்தநாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை தொடர்ந்து தூத்துக்குடியில் பல தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டை உட்பட தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் விஜி செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் கழக துணை பொது செயலாளர் கலைவேந்தன் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆட்டோ கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினர்


நிகழ்ச்சியில் மாரிமுத்து மத்திய மாவட்ட துணை செயலாளர் , விஜி தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர், செல்வகுமார் செய்தி தொடர்பாளர் , முருகன் தொண்டரணி, முத்துக்குமார் ஊடகப்பிரிவு , அந்தோணிசாமி வட்டச் செயலாளர், வீ சிறுத்தை குமார் செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி