கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

78பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி வடக்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு கல்மேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்

இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக இவர்களுக்கு வேலை வழங்காமல் இருந்து வருகிறது மேலும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அடுத்த கிராமத்தில் சென்று வேலை பார்க்க கூறி வருகிறது இதன் காரணமாக வடக்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வடக்கு கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கிராமத்திலேயே தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மேலும் ஒரு மாதமாக 100 நாள் வேலை கிடைக்காததால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென கூறினர்

தொடர்புடைய செய்தி