தேனியில் 52 மையங்களில் குரூப் 2 தேர்வு
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (செப்.,14) நடைபெற உள்ள தொகுதி 2, 2ஏ பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தேனி வட்டாரத்தில் 28, பெரியகுளம் வட்டாரத்தில் 9, உத்தமபாளையம் வட்டாரத்தில் 15 என மொத்தம் 52 மையங்களில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,060 பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.