இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினி சார் எங்ககிட்ட சொல்லிவிட்டார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடையில் 10 நாள் படப்பிடிப்புக்கு ஓய்வு. அக்.15 முதல் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நிறைய செய்திகள் வந்திருந்தன. அது எங்களுக்கே பயமாக இருந்தது. இறைவன் அருளால் அவர் நன்றாக இருப்பார்” என்றார்.