இரவில் தூக்கமின்மை பிரச்சனை நீடித்தால், அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இரவில் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இல்லையெனில் மனநலனும் மிகவும் பாதிக்கப்படும். மேலும் உடல் பருமன், நீரிழிவு, கொழுப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் இரவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும்.