மதுரை முதல் போடி வரை உள்ள 91 கிலோ மீட்டர் ரயில்வே பாதையை மின்மயம் ஆக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அந்த ரயில்வே பாதையில் தண்டவாளங்களின் அதிர்வை சோதனை செய்யும் விதமாக நேற்று தென்னக ரயில்வே துறையின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு, அதிவேக ரயில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.