போடிநாயக்கனூர் - Bodinayakanur

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: திமுகவினர் மரியாதை

தேனி மாவட்டம் போடி நகர திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா 116 -வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்.,15) போடி திமுக நகர் கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் திமுகவினர் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நகர் தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜ ரமேஷ் தேனி திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன் பஷீர் முகமது மற்றும் பரணிதரன், மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மாயக்கண்ணன், அவைத்தலைவர் சின்னத்துரை நகர துணை செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்