காஞ்சிபுரத்தில் ஏரிகள் அதிகளவு இருப்பதால், நீர் பாசனத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஆனால் முறையான நீர் தேக்க வசதிகள் இல்லாததால், ஒருபோகம் மட்டுமே விவசாயிகள் பயிர் வைத்து வருகின்றனர். இதனால் விவசாயங்கள் தடுப்பணை கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் தொள்ளாழி கிராமத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால், 291 ஏக்கர் விளை நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.