முகநூல் (Facebook) நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும் முதலிடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உள்ளார். அவர் மார்க் ஜூக்கர்பர்க்கைவிட, 50 பில்லியன் டாலர்கள் அதிகமாக வைத்துள்ளார். இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார்.