இந்திய பங்குச்சந்தை இன்றும் (அக்.4) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம்பெற்ற இந்திய பங்குச்சந்தை, மதியம் 12.30 மணிக்கு மேல் வீழ்ச்சியடைய தொடங்கியது. நிப்டி 235 புள்ளிகள் சரிந்து 25,014 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், சுமார் 400 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51,460 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் வரும் வாரங்களில் இந்திய பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.