சிவகங்கை - Sivaganga

சிவகங்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் அனுசரிப்பு

ஆங்கிலேயரை எதிர்த்து தூக்குக்கயிறை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை அரண்மனைவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு, சிவகங்கை நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டத்தலைவர் சந்தானகிருஷ்ணன், நகர் தலைவர் தசரதன், இளைஞரணித்தலைவர் சரவணன், சிவகங்கை தமிழ்ச்சங்க நிறுவனத்தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் முத்துக்கண்ணன், ஹரிபாஸ்கர், தாய் இல்ல இயக்குனர் புஷ்பராஜ், உறுப்பினர்கள் இளையராஜா, நாகேஷ், முருகானந்தம், நாகராஜன், கார்த்தி, தியாகு, திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இன்று மாலை சுமார் 5 மணி வரை மலரஞ்சலி செலுத்தினர்.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 16, 2024, 17:10 IST/காரைக்குடி
காரைக்குடி

காரைக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் திடீர் பணி நீக்கம்

Oct 16, 2024, 17:10 IST
கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வந்த முன்னாள் ராணுவத்தினர் 84 பேர் எவ்வித முன்னறிவிப்பின்றி செவ்வாய்க்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவவீரரும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருமான தேவகோட்டை அருகே ஆந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த போ. சோலை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: முன்னாள் படை வீரரான நான் கடந்த வருடம் 16-10-2023 அன்று அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், தேவகோட்டைக் கிளையில் பாதுகாவலராகப் பணியமர்த்தப்பட்டேன். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை எந்த வித முன்அறிவிப்பும் இன்றி நேற்று வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார். என்னைப்போல கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றிய முன்னாள் படை வீரர்கள் 84 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். காரணம் தெரியவில்லை. இதனால் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளன. எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.