சிறுபான்மையினர் நல ஆணையத்தலைவர் முக்கியத் தகவல்

82பார்த்தது
தமிழக அரசின் திட்டங்கள் சிறுபான்மையினரிடம் போய்ச்சேர்வதில் என்ன தடை என்பது பற்றி ஆராய்ச்சி நடைபெறுவதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தலைவர் சொ. ஜோஅருண், சே. ச. தெரிவித்தார்.
சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் செய்தியார்களிடம் பேசுகையில்:
அரசு சிறுபான்மையினருக்கு எந்த மாதிரியான திட்டங்களை வகுத்துள்ளது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்துள்ள பயன் பற்றி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஆய்வு நடத்த சிறுபான்மை ஆணையம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து, டிச. 4, 5, 6 ஆகிய தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், அதனைத்தொடர்ந்து இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இறுதியாக சென்னை மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்படும்.
சிறுபான்மையினருக்கான திட்டங்களின் தாக்கம், செயல்பாடு, முன்னேற்றம் குறித்தும் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரிடம் போய்ச்சேருவதில் என்ன தடை என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தமிழக அரசு ரூ. 34 லட்சம் ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 6 ஆராய்ச்சி மாதிரிகள் எடுக்கப் பட்டுள்ளன. அவற்றை சமூக அறிவியல் அறிஞர்கள் 5 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்கிறார்கள். என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி