சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் திருநாளை முன்னிட்டு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம் நடைபெற்றது முன்னதாக விநாயகர் பெருமான் முருகப்பெருமான் மற்றும் மூலவர் பத்திரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றி ஆயிரம் கண்கள் வைத்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து தீப தூப ஆராதனை ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்றன நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மனை வழிபட்டனர்.