சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: சர்வர் பிரச்சினை -நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இங்கு தினசரி சிகிச்சைக்காக வருபவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தி ஐநூறை கடந்துள்ளது. குறிப்பாக அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருவதால் தினசரி உள் நோயாளிகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் இங்கு புற நோயாளிகள் பிரிவில் வரக்கூடிய நோயாளிகளின் பெயர் வயது மற்றும் நோய் குறித்து மருத்துவத்துறை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்த இணையதளமானது சர்வர் பிரச்சனையால் அடிக்கடி முடங்குகிறது. இதனால் நோயாளிகளின் வருகையை பதிவு செய்ய ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன. குறிப்பாக கைகளில் வருகையை பதிவு செய்வதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.

வீடியோஸ்


சிவகங்கை