சிவகங்கை - Sivaganga

முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இத்திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்களுடன் அமர்ந்தநிலையில் அருள் பாலிக்கிறார் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர தேர் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது இவ்விழா முன்னிட்டு கொடியேற்ற வைபவம் நடந்தன முன்னதாக உற்சவர் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்துள்ள செய்து கோவில் உள்பிரகாரம் வலம் வந்தனர் தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் கொடி மரத்திற்கு பால் தண்ணீர் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து முருகன் திருஓவியம் வரையப்பட்ட வஸ்திரத்தை வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது இதனை அடுத்து தர்ப்பை புல் பட்டு வஸ்திரம் பூமாலைகள் சாற்றி உதிரி புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனைகள் நடைபெற்றன நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் கொடி மரத்திற்கும் காப்பு கட்டப்பட்டது.

வீடியோஸ்


சிவகங்கை
Mar 15, 2024, 16:03 IST/மானமதுரை
மானமதுரை

200க்கும் மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்ற மெகா கிடா முட்டு சண்டை

Mar 15, 2024, 16:03 IST
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் விழாவை முன்னிட்டு இன்று 3வது ஆண்டாக பிரம்மாண்டமான ஆட்டு கிடா சண்டை நடந்தது. கேரளா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சண்டையில் பங்கேற்க கிடாய்கள் வந்தது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தென்மாவட்டங்களில் ஜல்லிகட்டிற்கு அடுத்தபடியாக ஆட்டு கிடா சண்டை நடைபெறுவது வழக்கம். , 3வது ஆண்டாக பொட்டப்பாளையத்தில் ஆட்டு கிடா சண்டை காலை 9 மணிக்கு தொடங்கியது. கேரளா, ஆந்திரா மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 240 ஆட்டு கிடாக்கள் போட்டியில் மோதின. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து கிடாய்களுக்கும் துண்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதில் அதிக (60 முறை) முறை முட்டி எதிராளி கிடாயை விழுத்தாட்டிய கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மோதலுக்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கு கட்டில், பீரோ, ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.